அயோத்தியில் பொருளாதார மறுமலர்ச்சி!! ஐஐஎம் ஆய்வு!!

Update: 2026-02-20 07:53 GMT

அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அந்நகரில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக லக்னோவின் இந்திய மேலாண்மை நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. பொருளாதார மறுமலர்ச்சி என்ற தலைப்பிலான இதன் ஆய்வறிக்கை சமீபத்தில் வெளியாகியுள்ளது.


ராமர் கோயில் திறப்பதற்கு முன் அயோத்திக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.7 லட்சம் பேர் வருகை தந்தனர். இது, 2024-ம் ஆண்டு ராமர் கோயில் பிராண பிரதிஷ்டைக்கு பிறகு, முதல் 6 மாதங்களிலேயே 11 கோடியை எட்டியது. இதனால் அயோத்தியில் பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.


அயோத்தியில் சாதாரண கடைக்காரரின் சராசரி வருமானம் 5 மடங்கு அதிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு ரூ.400-500 ஆக இருந்த இந்த வருமானம் இப்போது ரூ.2,500 வரை உயர்ந்துள்ளது. அயோத்தியில் நிலத்தின் மதிப்பு, குறிப்பாக கோயிலுக்கு அருகில் 5 மடங்கு முதல் 10 மடங்கு வரை உயர்ந்துள்ளது.


இந்த நிதியாண்டில் சுற்றுலா மூலம் அயோத்திக்கான வருவாய் ரூ.10,000 கோடியை தாண்டும் வாய்ப்புகள் உள்ளன. கடந்த 2020ம் ஆண்டை விட 2025ல் தங்கும் விடுதிகளின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. அயோத்தியில் சுற்றுலா சார்ந்த நடவடிக்கைகள் ரூ.20 ஆயிரம் கோடி முதல் ரூ.25 ஆயிரம் கோடி வரை வரி வருவாயை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News