அயோத்தியில் அமைய உள்ள மசூதியின் வரைபடம் - ஒப்புதலுக்கு அனுப்பிவைப்பு .!

Update: 2021-05-25 14:31 GMT

உத்திரப் பிரதேசத்தில் ராம ஜென்ம பூமி வழக்கில், உச்சநீதிமன்ற 2019ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டவும், மேலும் முஸ்லிம்களுக்காக தனியாக வேறு 5 ஏக்கர் நிலத்தை வழங்கி அங்கு மசூதி கட்டிக் கொள்ளவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 2019 ஆம் ஆண்டில் இந்த வழக்கு மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவருடைய மதங்களின் கடவுள்களை வணங்க முழு சுதந்திரத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளது. அதன்படி முஸ்லிம்கள் தங்களுக்கான மசூதிகளை கட்டிக் கொள்வதில் முயற்சி எடுத்து வருகிறார்கள்.


அதில் தற்போது அயோத்தியில் கட்டப்பட உள்ள மசூதிக்கான வரைபடம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக தற்பொழுது சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ராமஜென்ம பூமி பகுதியில் இருந்து சுமார் 24 கி.மீ., தொலைவில் உள்ள தானிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலத்தை மாநில அரசு முஸ்லிம் வக்பு வாரியத்திடம் வழங்கியது. ஆகவே இந்த இடத்தில் அவர்கள் தங்களுக்கான வசதிகளை கட்டிக்கொள்ள முழு சுதந்திரம் உண்டு. இந்த மசூதியை கட்ட இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை முஸ்லிம் வக்பு வாரியம் அமைத்தது. இந்நிலையில், மசூதி கட்டுமானத்திற்கான வரைபடம் அயோத்தி மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதலுக்காக நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.


எனவே ஒப்புதலுக்காக அளிக்கப்பட்டுள்ள கட்டுமான வரைபடத்தில் இந்த மசூதியில் ஒரே நேரத்தில், 2,000 பேர் வரை அமரும் வகையில் போதுமான இடத்துடன் கட்டப்பட உள்ளது. இதனுடன், 300 படுக்கை வசதிகளுடன் கூடிய பல்நோக்கு மருத்துவமனையும், சமூக சமையல் கூடம் ஒன்றும் இந்த வளாகத்தில் கட்டப்பட உள்ளன. நம் நாட்டை கட்டமைக்க, முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்பை முன்னிலைப்படுத்தும் வகையில் ஆய்வு கூடம் ஒன்றும் கட்டப்பட உள்ளது. 


Tags:    

Similar News