கொரோனாவிற்கு எதிராக 'மிஷன் கோவிட் சுரக்ஷா' திட்டத்தை கையிலெடுத்த மத்திய அரசு.!

Update: 2021-05-29 12:37 GMT

கொரோனா வைரஸின் 2வது அலைகளை இந்தியா தற்போது எதிர்த்துப் போராடி வரும் நிலையில், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்காக, மிஷன் கோவிட் சுரக்ஷாவின் கீழ் மானியங்களுடன் சில பொதுத்துறை நிறுவனங்களுக்கு தடுப்பூசி உற்பத்தியில் ஆதரவளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்தகைய நடவடிக்கையின் கீழ், ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட இந்தியன் இம்யூனோலாஜிக்கல் லிமிடெட்(IIL) நிறுவனமானது முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மாதந்தோறும் சுமார் 10-15 மில்லியன் தடுப்பூசி அளவை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 22.46 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மாநிலங்களுக்கு இன்னும் 1.84 கோடி டோஸ்கள் தயார் நிலையில் உள்ளன என்றும் 3,20,380 தடுப்பூசி டோஸ்கள் அடுத்த 3 நாட்களுக்குள் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இதுவரை, இலவசமாகவும், நேரடி மாநில கொள்முதல் வகை மூலமாகவும், 22.46 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை மாநிலங்ககளுக்கு வழங்கி உள்ளது.


இந்தியாவில் சுமார், 1.84 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி அளவுகளை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிடம் அரசாங்கம் வழங்கி உள்ளன. கொரோனா தடுப்பூசியின் தாராளமயமாக்கப்பட்ட மற்றும் துரிதப்படுத்தப்பட்ட கட்டத்தில் தற்பொழுது நடைமுறைப்படுத்துவது 2021 மே 1 முதல் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டத்தில் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. எனவே தடுப்பூசி தேவைகளுக்கு ஏற்றவாறு அதை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் அரசாங்கம் தற்பொழுது ஆலோசித்து வருகிறது. 

Tags:    

Similar News