உள்நாட்டு விமான பயணம் அதிகரிப்பு..!

Update: 2021-05-30 12:53 GMT

இத்தகைய கடுமையான நோய் தொற்றுக்கு மத்தியில் தரைவழி பயணம் என்பது சற்று கடினமான விஷயம்தான். எனவே நம்முடைய கடினமான சூழ்நிலையில் மக்களுக்கு உறுதுணையாக இருப்பது விமானங்களில் பயணம் மட்டும்தான். இதனால் தற்போது விமானங்களில் அதாவது இந்தியாவுக்குள் பயணம் மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக உள்ளது. எனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உள்நாட்டு விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச விமான சேவைகள் இதுவரை துவங்கப்படவில்லை. 


இந்நிலையில், உள்நாட்டு விமான சேவைகளின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உள்நாட்டு விமான சேவைகளின் குறைந்த பட்ச கட்டணம் 13 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்பட்டு, இந்த புதிய திருத்தம் நாளை மறுநாள் முதல் அமலுக்கு வர உள்ளது. இது குறித்து, மத்திய விமான போக்குவரத்துத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது, உள்நாட்டு விமான சேவைகளின் குறைந்தபட்ச கட்டணம் உயர்த்தப் படுகிறது. 40 நிமிடங்களுக்கு குறைவான பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,300 ரூபாய் கட்டணமாக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்தது. 


இனி அது 2,600 ரூபாயாக உயர்த்தி வசூலிக்கப்படும். இதேபோல் 40 – 60 நிமிட பயண நேரம் உடைய விமான சேவைக்கு 2,900 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இனி அதற்கு 3,300 ரூபாய் வசூலிக்கப்படும். எனவே நேரத்திற்கு ஏற்றவாறு விமானங்களின் கட்டணம் கூடுதலாக உயர்த்தப்படுகிறது. உதாரணமாக, டெல்லி – மும்பை இடையிலான விமான சேவைக்கு, இனி கூடுதலாக 700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். இந்த புதிய கட்டண விதிப்பு ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

Similar News