ஏழைகளுக்கு உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் தீபாவளி வரை தொடரும் - பிரதமர் அதிரடி.!
இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, இந்த தொற்று நோய் காலங்களில் ஏழை மக்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்காகப் பிரதமர் கரிப் கல்யாண் அண்ணா யோஜனா இந்த ஆண்டு தீபாவளி வரை தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
"நவம்பர் வரை 80 கோடி இந்தியர்களுக்கு ஒரு மாதத்திற்கு சில குறிப்பிட்ட அளவு உணவு தானியங்கள் வழங்கப்படும்," என்று பிரதமர் மோடி தெரிவித்தார். ஏழை மக்கள் பசியால் வாடக்கூடாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த திட்டத்தின் கீழ், குடும்பத்தில் உள்ள ஒரு நபருக்கு ஒரு மாதத்திற்கு 5 கிலோ அரிசி அல்லது கோதுமை மற்றும் அதனுடன் 1 கிலோ பருப்பு வகையும் வழங்கப்படுகின்றது.
கடந்த ஆண்டும் இதே போன்று ஒரு திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிவித்தது, மேலும் இந்த திட்டத்திற்காக மொத்தம் 1.5 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
இந்த திட்டம் மீண்டும் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்டது. மேலும் மே மற்றும் ஜூன் மாதத்திற்கான செலவு 26,000 கோடி என்று மதிப்பிடப்பட்டது. மக்கள் கொரோனா தொற்று காலத்தை எதிர்கொள்ள இந்த திட்டம் நவம்பர் வரை தொடரவுள்ளது.
மேலும் தொற்றுநோய் குறித்துப் பேசிய பிரதமர், இந்த 1.5 ஆண்டுகளில் மருத்துவ உள்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். கடந்த ஒரு வருடமாக, இந்தியாவில் இரண்டு தடுப்பூசி தயாரிக்கப்பட்டு மற்றும் இன்று வரை 23 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.
வரும் நாட்களில் தடுப்பூசி விநியோகம் அதிகரிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் குழந்தைகள் குறித்த வல்லுநர்கள் கவலை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Source: டைம்ஸ் நவ்