கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்.!

Update: 2021-06-08 12:33 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்தாலும் மக்கள் தங்களுடைய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாதிப்பு குறைந்து இருந்தாலும் நாம் கடைபிடிக்க வேண்டிய பழக்கங்களை, குறிப்பாக மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பதும் போன்றவற்றை மறக்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை காலை நடைபெற உள்ளது.


காணொளி காட்சி மூலம் நடக்கும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அப்போது, பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி, தீபாவளி வரையில் ரேஷனில் உணவு தானியங்கள் இலவசம் உள்ளிட்ட அறிவிப்புகளை செயல்படுத்துவது தொடர்பாக பல ஆலோசனை நடத்தவிருக்கின்றனர். மேலும், 2வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில், 3வது அலையில் சிக்காமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றியும் ஆலோசிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. 


எப்படி இருந்தாலும், ஒவ்வொரு தனிமனிதர்களும் தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நாட்டின் அனைத்து மக்களின் பாதுகாப்பை அரசு மிகவும் சுலபமாக கண்காணிக்க முடியும் என்றும் அரசுத்தரப்பில் கூறப்படுகிறது. குறிப்பாக நோய்த்தொற்று நீங்கள் இருந்தால் கண்டிப்பாக உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மேலும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நீங்கள் மற்றவர்களை அழைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் மாநில அரசாங்கம் தங்கள் மாவட்டங்களில் உள்ள பாதிப்புகள் எண்ணிக்கையை அவ்வப்போது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.  

Similar News