ஐ.நா பொதுச் சபையில் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்ட இந்தியர்!

Update: 2021-06-11 12:42 GMT

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தலைவர் பதவிக்கு சில மாதங்களுக்கு முன்பு நடந்த தேர்தலில் மாலத்தீவு வெளியுறவு துறை அமைச்சர் அப்துல்லா ஷாஹித் என்பவர் தற்பொழுது வெற்றி பெற்றார். இவர் 143 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் சல்மாய் ரசூலுக்கு 48 ஓட்டுகளும் கிடைத்தன. எனவே தற்பொழுது ஐ.நா பொதுச் சபை தலைவரின் முதன்மை செயலராக பதவியில் நாகராஜ் நாயுடு குமார் நியமிக்கப் பட்டுள்ளார்.


இந்த நிலையில் அப்துல்லா ஷாஹித் தன் சிறப்பு துாதராக ஐ.நா. வுக்கான மாலத்தீவு தூதர் தில்மீசா உசேன், முதன்மை செயலராக இந்திய துணை துாதர் கே.நாகராஜ் நாயுடு ஆகியோரை நியமித்துள்ளார். எனவே இத்தகைய பொறுப்பை பெற்றுக் கொண்டவுடன், இந்த பதவிக்கு தன்னை நியமனம் செய்த அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். 


இது குறித்து நாகராஜ் நாயுடு அவர்கள் கூறுகையில், "ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக, முக்கிய கொள்கைகளை உருவாக்கும் அமைப்பாக ஐ.நா., பொதுச் சபை திகழ்கிறது. 193 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐ.நா., பொதுச் சபை, சர்வதேச அமைதி, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை விவாதிக்கும் தளமாக விளங்குகிறது. ஐ.நா பொதுச் சபையில் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதில், அப்துல்லா ஷாஹித் தலைமையில் பணியாற்ற கிடைத்த வாய்ப்பை எண்ணி பெருமையாக கருதுகிறேன்" என்று அவர் கூறியுள்ளார். 

Similar News