மத்திய அரசின் அசத்தல் அறிவிப்பு : கருப்பு பூஞ்சை மருந்துக்கும் வரி விலக்கு!

Update: 2021-06-14 12:43 GMT

கொரோனா தொற்றுக்கு அடுத்தபடியாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் தற்போது மிகவும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக கொரோனா நோய் பாதித்தவர்களுக்கு, இந்த கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாகவும் மருத்துவ துறை கூறியுள்ளது. இதனால் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு எதிரான செயல்படும் மருந்துகளுக்கு விலையும் சற்று அதிகமாக உள்ளது. இதன் காரணமாக தற்போது கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கு பயன்படும் ஆம்போடெரிசின்-B மருந்துக்கு GST இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.


மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், நேற்று 44-வது GST கவுன்சில் கூட்டம் இணையம் வழியாக நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாகூர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதியமைச்சர்கள், மத்திய, மாநில அரசுகளின் முக்கிய அதிகாரிகள் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படும் மருந்துகளின் மீதான GST வரி நீக்குவது தொடர்பாக மேலும் விவாதிக்கப்பட்டது.


இதனையடுத்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் கூறுகையில், "கரும்பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆம்போடெரிசின் B மருந்துக்கு GST இல்லை என அறிவித்துள்ளார். மேலும், ரெம்டெபெரும்பாலான கொரோனா தடுப்பு உபகரணங்கள், மருந்துக்கு GST வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என அவர் கூறியுள்ளார். 

Similar News