கொரோனா பணிகளுக்காக களமிறக்கப்படும் ட்ரோன்கள் : டெண்டர்களை வரவேற்கிறது மத்திய அரசு!
தற்போது இருக்கும் கடினமான சூழலில் நோய்தொற்று ஒருவரிடமிருந்து, மற்றவர்களுக்கு பரவும் வாய்ப்பு என்பது எளிதாக உள்ளது. இதன் காரணமாக நீண்டதூரம் பகுதிகளுக்கு மருந்து பொருட்கள் மற்றும் தடுப்பூசிகளை கொண்டுசேர்க்கும் பணிகளுக்கு ட்ரோன்களை பயன்படுத்தும் முயற்சியில் அரசு களமிறங்கியுள்ளது. எனவே இதற்கான டெண்டர் விடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டெண்டர்களை எடுக்கும் சரியான நிறுவனங்கள் அரசு விதிக்கும் நிபந்தனைகளுக்கு தகுதி உடையதாக இருக்க வேண்டும்.
எனவே இந்த டெண்டரை தற்பொழுது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்(ICMR) அழைத்துள்ளது. இதற்கான கடைசி தேதி ஜூன் 22 ஆகும். ட்ரோன் என்பது ஒரு ஆளில்லா சிறிய விமானம் ஆகும். இதை இயக்கும் நபர்களின் மூலம் இது கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஆளில்லா விமானத்தை கண்காணிப்பதற்கு அதில் பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்களில் உதவிகளின் மூலம் எதிர் திசையில் என்ன நடக்கிறது? என்பதைப் பார்க்க முடியும். ஆனால் நீண்ட தூரம் பயணிக்கும் இந்த சிறிய விமானம் வழிகளில் ஏற்படும் சின்ன தவறுகளினால் கூட அது எடுத்துக் கொண்டு செல்லும் மொத்த மருந்து பொருட்களும் பாதிக்கப்பட்டு விடும் என்பதைக் கருத்தில் கொண்டு விஷுவல் லைன் ஆஃப் சைட் ரூல்ஸ்(VLOS) என்பதை பூர்த்தி செய்யும் நிறுவனங்களுக்கு மட்டும் தான் இந்த டெண்டர் அனுமதி அளிக்கிறது.
இத்தகைய செயல்கள் மூலமாக மருந்து பொருட்களை எளிதாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது சாத்தியமாகிறது. மற்றவற்றை ஒப்பிடும் பொழுது இதன் செலவு மிகவும் குறைவு தான். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் சமீபத்தில் மூன்று நிறுவனங்களை இந்த டெண்டர்காக பட்டியலிட்டுள்ளன. த்ரோட்டில் ஏரோஸ்பேஸ், அன்ரா டெக்னாலஜிஸ் மற்றும் தக்ஷா ஆளில்லா சிஸ்டம்ஸ் ஆகியவை அடுத்த வாரம் முதல் VLOS நடவடிக்கைகளுக்கு சோதனைகளை மேற்கொள்ள உள்ளது.