குழந்தைகளை கொரோனா அலைகளில் இருந்து பாதுகாக்கும் வழிகாட்டுதல் : சுகாதார அமைச்சகம் வெளியீடு.!

Update: 2021-06-17 12:27 GMT

இந்தியாவில் குறைந்து வரும் நோய் தொற்றுக்கு இடையில், இனி அடுத்து அடுத்து வரும் கொரோனா அலைகள் காரணமாக, குழந்தைகளுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்ற செய்தி மக்களிடையே மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இது மாதிரி நடக்க வாய்ப்பு இல்லை என அரசு தரப்பில் இருந்து தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. இருப்பினும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் குழந்தைகளிடமிருந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொள்வதன் மூலமாக மட்டுமே இந்த நோய் தொற்று குழந்தைகளுக்கு ஏற்படாமல் பாதுகாக்க முடியும் அந்த வகையில் தற்போது சுகாதார அமைச்சகம் சார்பில் வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.


அதில் குறிப்பாக பெரியவர்களுக்கு கொடுக்கப்படும் பல மருந்துகளை குழந்தைகளுக்கு வழங்க எந்த பரிந்துரையும் செய்யப்படவில்லை என மத்திய சுகாதார துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்க பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை தற்போது குறைந்துள்ளது. இருப்பினும், கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. கொரோனா முதல் அலை பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 2வது அலையின் பரவல் அதிகரித்தது. அதனால், சில மாத இடைவெளியில் 3 மூன்றாம் அலை பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது. எனவே இதை எதிர்கொள்ள, அனைத்து தரப்பினரும் தயாராக இருக்க வேண்டும்.


கொரோனா பாதிப்பிலிருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். தொற்றால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு சிகிச்சையளிக்க வழங்கப்படும் இர்மெக்டின், ஹைட்ராசி குளோரோக்வின் போன்ற மருந்துகளை தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்க பரிந்துரைக்கப் படவில்லை. தற்போது வரை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. விரைவில் குழந்தைகளுக்கான தடுப்பூசி வந்தவுடன் அனைவரும் கொரோனா பாதிப்பிலிருந்து தங்களைப் பாதுகாக்கக் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Similar News