நான்கில் ஒரு பங்கு வனப்பகுதியை இந்தியா மேம்படுத்துகிறது : ஐ.நா-வில் பிரதமர் பெருமிதம்.!

Update: 2021-06-18 13:02 GMT

ஐக்கிய நாட்டு சபையின் சார்பாக நடைபெற்ற பாலைவனமாக்கல், நில சீரழிவு மற்றும் வறட்சி இந்தத் தலைப்பில் சார்பாக பல முக்கிய தலைவர்கள் கலந்துகொண்ட இது பற்றிப் பேசினார்கள். இதில் பிரதமர் மோடி அவர்கள் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி இந்தியாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மொத்த ஒருங்கிணைந்த வனப்பகுதியை இந்தியா நாட்டின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக உயர்த்தியுள்ளது" என்று பெருமையாக கூறியுள்ளார்.


இணைய வழியாக நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பாலைவனமாக்கலுக்கான மாநாட்டின் 14 வது அமர்வின் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சிறப்புரையாற்றினார். இந்த மாநாட்டில் அவர் மேலும் கூறுகையில், "அனைத்து உயிர்களையும, வாழ்வாதாரங்களையும் ஆதரிப்பதற்கான அடிப்படையாகக் இப்போது விளங்குவதும் நிலை மட்டும்தான் அதிலும் குறிப்பாக காடுகள் பாதுகாக்கப்பட வேண்டியவை அனைவரும் ஒன்றாக சேர்ந்து அவற்றைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது உள்ளோம்" என்றும் அவர் கூறினார். நில சீரழிவு பிரச்சினையை சமாளிக்க இந்தியா எடுத்துள்ள நடவடிக்கைகளையும் பிரதமர் பட்டியலிட்டார். சர்வதேச அரங்குகளில் நில சீரழிவு பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதில் இந்தியா முன்னிலை வகித்துள்ளது என்று அவர் கூறினார்.


இந்தியாவில், கடந்த 10 ஆண்டுகளில், சுமார் 3 மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி சேர்க்கப்பட்டுள்ளது. இது ஒருங்கிணைந்த வனப்பகுதியை நாட்டின் மொத்த பரப்பளவில் நான்கில் ஒரு பங்காக உயர்த்தியுள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். அதே மனப்பான்மையில், உள்நாட்டு நுட்பங்களை ஊக்குவிக்கும் போது நில மறுசீரமைப்பிற்கான பயனுள்ள உத்திகளை நாம் உருவாக்க வேண்டும்" என்று பிரதமர் வலியுறுத்தினார். மேலும் நமது எதிர்கால சந்ததியினருக்கு ஆரோக்கியமான பூமியை விட்டுச் செல்வது நமது புனிதமான கடமையாகும் என்று பிரதமர் கூறினார்.

Similar News