காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டு கொலை!

Update: 2021-06-21 08:10 GMT

ஜம்மு காஷ்மீரில் சோப்பூர் மாவட்டத்தில், குண்ட் பிராத் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நேற்று நள்ளிரவு முதல் துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இந்த துப்பாக்கி சூட்டில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதி முதாசீர் பண்டிட் உட்பட மூன்று பேர் சூட்டு கொல்லப்பட்டனர்.


இது குறித்து காஷ்மீர் I.G.விஜய் குமார் கூறுகையில் "எங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையில் ஜூலை 20 ஆம் தேதி நள்ளிரவு முதல் குண்ட் பிராத் பகுதியில்  பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். அங்கு நடந்த என்கவுண்ட்டரில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதியான முதாசீர் பண்டிட் உட்பட மூன்று பேரை சுட்டு கொன்றனர்.

சமீபத்தில் 3 போலீசார், 2 கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்களில் 2 பேரை படுகொலை செய்ததில் முதாசீர் பண்டிட்டுக்கு தொடர்புள்ளது. மேலும் வடகாஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்த அஸ்ரார் என்ற அப்துல்லா என அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டு பயங்கரவாதி கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தீவிரமுடன் செயல்பட்டு வருகிறான் என்றும் நாங்கள் அடையாளம் கண்டு உள்ளோம்."என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News