மற்ற பூஞ்சை தொற்றை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானதாகும்: பீகாரில் கண்டுபிடிப்பு.!

Update: 2021-06-21 12:34 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. ஆனால் முன்பை விட தற்போது உள்ள பாதிப்புகளில் எண்ணிக்கை குறைந்து கொண்டுதான் வருகின்றது. இருந்தாலும் இன்னும் சில நாட்களில் மூன்றாவது அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் விரைவாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 


இதற்கிடையில், கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களில் சிலர் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருவது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு தொற்று நோயை விட, இந்த நோய்த்தொற்று மிகவும் அரிதான வகை ஆகும். இந்த நோய் சைனஸ்கள், மூளை மற்றும் நுரையீரலை தாக்குகின்றன. இதுவும் உயிருக்கு ஆபத்தான நோய் தான் என்றாலும் குணப்படுத்த படக்கூடிய நோய் என மருத்துவர்கள் கூறுகிறார்கள் தகுந்த சிகிச்சை எடுப்பதன் மூலம் இந்த நோய் தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும் என்பதும் அவர்களுடைய கருத்து. 


கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களை மியூகோர்மைகோசிஸ் என்ற கருப்பு பூஞ்சைகள் தாக்குவது அண்மையில் தெரியவந்தது. தமிழகத்திலும் கருப்பு பூஞ்சைகளின் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த சூழ்நிலைகளில், கருப்பு பூஞ்சைகளைவிட மிகவும் ஆபத்தான வெள்ளை பூஞ்சைகள் பீகார் தலைநகர் பாட்னாவில் முதல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்புகள் 4 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளதாக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் S.N. சிங் தெரிவித்துள்ளார். மேலும் கருப்பு, பச்சை பூஞ்சைகளை விட இந்த வெள்ளை பூஞ்சைகள் மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிர்வாகம் சார்பாக கூறப்பட்டுள்ளது. 

Similar News