'ட்விட்டரில் மட்டுமே ராகுல் செயல்படுகிறார்' - கூட்டணி கட்சியான சிவசேனா விமர்சனம்!

Update: 2021-06-25 01:00 GMT

மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா தலைமையிலான கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இந்த நிலையில், சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாம்னாவில் ராகுல் காந்தி ட்விட்டரில் மட்டுமே செயல்படுவதாக காங்கிரசைத் தாக்கி எழுதப்பட்ட கட்டுரையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் தனித்து போட்டியிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்த பின்னர் சிவசேனாவின் ராஜ்யசபா எம் பி சஞ்சய் ராவத் இது வரை எத்தனையோ அரசியல் போர்க்களங்களைப் பார்த்திருக்கிறோம் தேவைப்பட்டால் காங்கிரசை தனியாக எதிர்கொள்வோம் என்ற ரீதியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

"நேற்று எங்கள் கட்சியின் 55வது நிறுவன நாள். சிலர் தனியாக தேர்தலை சந்திக்கப் போகிறோம் என்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே என்ன சொன்னார்? அவர்கள் அப்படி செய்தால் நாம் என்ன செய்வோம்? சும்மா உட்கார்ந்து இருப்போமா? போட்டி போட நினைப்பவர்கள் அதை செய்து தான் பார்க்கட்டுமே" என்று சஞ்சய் ராவத் பேசியுள்ளார்.

இதன்பின்னர் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னாவில் "டிவிட்டரில் மட்டும் நரேந்திர மோடிக்கு எதிராக செயல்படுவதை நிறுத்திவிட்டு களத்தில் இறங்கி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் ஒன்றிணைக்க முயல வேண்டும்" என்று கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரை காங்கிரஸ் தலைமையையும் விமர்சிக்கும் விதமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கூட்டணி கட்சியே காங்கிரஸின் நிரந்தர பிரதமர் வேட்பாளரான அவர்கள் வாழ்வை ட்விட்டரில் மட்டுமே செயல்படுகிறார் என்றும் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டுமென்றும் விமர்சித்து இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source : TOI

Similar News