ஸ்மார்ட் போன் ஆன்லைன் விற்பனையில் சீனாவை மிஞ்சிய பாரதம் : உலக அளவில் முதலிடம்!

Update: 2021-06-25 12:37 GMT

இந்தியாவில் தற்பொழுது ஸ்மார்ட் போன்களை அதிக அளவில் பயன்படுத்தி பொருள்களின் எண்ணிக்கை நம்மால் கண்கூடாக பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆன்லைன் மூலமாக போன்களை வாக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இத்தகைய மாற்றம் தள்ளப்பட்ட காரணம் நோய் தொற்று என்று கூட சொல்லலாம். அதிலும் குறிப்பாக டிஜிட்டல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவிற்கு உலகில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளும் விதமாக ஒரு கருவி தேவைப்படுகிறது. அதற்கு ஸ்மார்ட்போன்கள் ஒரு தீர்வாகவும் அமைந்துள்ளன.


நம் வீட்டிலிருந்தே எந்த ஒரு நிகழ்வையும் மற்றும் நமக்குத் தேவையான பொருட்களையும் வாங்கிக் கொள்வதற்கு போன்கள் தென்படுகின்றன. எனவே அவற்றை ஆன்லைனில் வாங்குவதன் மூலம் நேரம் குறைக்கப்படுகிறது என்று பொதுவாக இந்தியர்களால் கருதப்படும் ஒரு விஷயம். அந்த வகையில் தற்பொழுது, முதலிடம் உலகளவில் இந்தியாவில் தான். ஆன்லைன் வாயிலாக மொபைல்போனை அதிகமானோர் வாங்கி உள்ளனர். மின்னணு வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கும் அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற நாடுகளை விட, இந்தியாவில் தான் அதிகம் வாங்கப்பட்டுள்ளது.


கடந்த 2020ம் ஆண்டில், இந்தியாவில் விற்பனை ஆன மொபைல் போன்களில், 45 சதவீத போன்கள் மட்டும் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக, 'கவுன்டர்பாயின்ட் ரிசர்ச்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில், இந்தியாவில் தான் ஆன்லைன் வாயிலாக, அதிகளவிலான போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் ஆன்லைன் விற்பனையின் பங்கு, 45 சதவீதம் என்ற நிலையில், அடுத்த இடத்தில், பிரிட்டன் உள்ளது. இங்கு 39 சதவீத போன்கள், ஆன்லைன் வாயிலாக விற்பனை ஆகியுள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் சீனா 34 சதவீத பங்களிப்புடன் உள்ளது. அமெரிக்காவில், 24 சதவீதம்தான் வாங்கப்பட்டுள்ளது. மின்னணு பொருட்கள் தயாரிப்பில் கொடிகட்டி பறக்கும் தென்கொரியாவில், ஆன்லைன் வாயிலாக வெறும், 16 சதவீதம் அளவுக்கே விற்பனை நடந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Similar News