மேற்கு வங்க தேர்தல் வன்முறை: ஆய்வறிக்கையை பெற்ற மத்திய அமைச்சர் - சாட்டையை சுழற்றுவாரா?

Update: 2021-06-30 14:06 GMT

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை பிடித்தது. இதனை தொடர்ந்து திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், எதிர்கட்சியினர் மீது வன்முறையை தாக்குதலில் ஈடுபட்டனர். குறிப்பாக பா.ஜ.க பெண்களை கற்பழிப்பது மற்றும் அவர்களை வீடு புகுந்து தாக்குவது போன்ற செயலில் ஈடுபட்டனர். இதில், பா.ஜ.க-வை சேர்ந்த 16 பேர் உட்பட 25 பேர் உயிர் இழந்துள்ளனர்.


மேற்கு வங்கத்தில் நடந்த வன்முறை சம்பவம் குறித்து 'கால் பார் ஜஸ்டிஸ்' என்ற சமூக அமைப்பு சார்பில், சிக்கிம் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி, பெர்மோத் கோஹ்லி தலைமையிலான குழு விசாரணை நடத்தியது. இந்த குழு தயாரித்த ஆய்வறிக்கையை, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியிடம் நேற்று சமர்ப்பித்தது .

இது குறித்து கிஷன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறும்போது "மேற்கு வங்கத்தில் திட்டமிட்டு, 15 ஆயிரத்திற்கும் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளின் ஆதரவுடன், சமூக விரோதிகள் எதிர்கட்சியினரையும், பொது மக்களையும் தாக்கியுள்ளனர். இந்த வன்முறையில் 25 பேர் பலியாகியுள்ளனர் மேலும், 7,000-க்கும் அதிகமான பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டுள்ளனர்.


ஏராளமான வீடுகள் சூறையாடப்பட்டுள்ளன. பலர் உயிருக்கு பயந்து தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து, அசாம், ஒடிசா, ஜார்க்கண்ட் உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு சென்றுள்ளனர். கட்டவிழ்த்து விடப்பட்ட இந்த  வன்முறையை காவல் துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்திடம் வழங்கி, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட கோருமாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வுக் குழுவின் பரிந்துரைகள் மீது ஆலோசனை நடத்தி, வன்முறைக்கு துணை போன அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News