"இந்தியாவின் சூரிய ஒளி மின்சக்தி திட்டம், உலக நாடுகளுக்கு முன்மாதிரி" - இளவரசர் சார்லஸ் புகழாரம்!

Update: 2021-07-01 10:18 GMT

பிரிட்டன் தலைநகர் லண்டனில் பருவநிலை நடவடிக்கைகள் குறித்த கருத்தரங்கை இந்திய சர்வதேச மன்றத்தின் அமர்வு நேற்று ஏற்பாடு செய்திருந்தது. இதில் பிரிட்டன் இளவரசர் சார்லஸ் கலந்துக் கொண்டு சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்கிறது என்று புகழ்ந்து பேசினார்.


இந்த கருத்தரங்கில் கலந்துக் கொண்ட சார்லஸ் கூறுகையில் "இந்தியாவின் உலகளாவிய அணுகுமுறை மற்றும் நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் மற்றும் தனியார் துறையுடன் எங்கள் முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கும் சில முக்கிய வழிகள் உள்ளன என்று நான் நம்புகிறேன். முதலில் மாற்றத்தை ஆதரிக்க தனியார் மூலதனத்தின் ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.



புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, குறிப்பாக சூரிய ஒளி மின்சக்தி இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவின் சூரிய ஒளி மின்சக்தி திட்டங்கள் உலகின் பிற பகுதிகளுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக இந்தியா திகழ்வதால், இயற்கையுடனும், நல்லிணக்கத்துடனும் ஆழ்ந்த தொடர்புடன் இணைந்த மக்களாகிய, உங்களுக்கும் இந்த முயற்சியில் ஒரு முக்கிய பங்கு உண்டு.

குறிப்பாக இந்தியாவின் தொழில் முனைவோர் திறமைகளின் செல்வத்தை கருத்தில் கொண்டு இதை நான் கூறுகிறேன். பருவநிலை நடவடிக்கை இலக்குகளை நோக்கிய நிலையான முதலீடுகளை தேடுவதற்காக தொடங்கப்பட்ட நிலையான சந்தைகளில், இந்திய தொழில் முனைவோர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் இணைய வேண்டும்." என்று இளவரசர் சார்லஸ் பேசினார்.

Tags:    

Similar News