கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாமா? மத்திய அமைச்சகத்தின் வழிகாட்டு!
இந்தியாவில் ஏற்பட்டு வருகின்ற இரண்டாவது அலை கொரோனா காரணமாக கர்ப்பிணி பெண்கள் அதிகமாக பாதிக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் இதனால் கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து ஒரு சந்தோஷமான சூழலையே இருந்து கொண்டுதான் வருகிறது. எனவே மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டு உள்ளது.
கொரோனா தடுப்புப் பணி குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் 90% பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் தொற்றில் இருந்து மீண்டு வருகிறார்கள். இவர்களில் சிலருக்கு மட்டுமே, உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதுடன், கருச்சிதைவு ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே இந்த பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க கர்ப்பிணிப் பெண்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும். கர்ப்பத்தால் தொற்று அதிகரிக்கும் என தவறாக கருத வேண்டாம். அறிகுறிகளுடன் தொற்றுக்கு உள்ளான கர்ப்பிணிப் பெண்கள் பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில் மற்றவர்கள் போல் மருத்துவமனையில் சேருவது அவசியம். உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் மற்றும் 35 வயதிற்கு மேற்பட்ட கர்ப்பிணியருக்கு, கொரோனாவால் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
கொரோனா பாதிப்பிற்கு ஆளான கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு பின் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி, நோய் பாதிப்பில் இருந்து பிறரை போலவே கர்ப்பிணியரையும் முழுமையாக பாதுகாக்கிறது. எனவே கொரோனா தடுப்பூசி பணிகளில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி குறித்த விளக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.