திரிபுரா : அதிகரிக்கும் கொரோனா தொற்று மீண்டும் ஊரடங்கு நீட்டிப்பு!

Update: 2021-07-05 01:45 GMT

இந்தியாவில் உள்ள நாட்டில் 6 மாநிலங்களில் மட்டும் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் ஆகிய 6 மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது.இதன் காரணமாக அந்த மாநிலங்களுக்கு மத்தியக் குழுவை நடத்தி ஆய்வு செய்ய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்தது. அதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு 6 மத்தியக் குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். தலா 2 பேர் கொண்ட இந்தக் குழுவில் மருத்துவர், பொது சுகாதார நிபுணர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்நிலையில், தொற்று அதிகம் உள்ள மாநிலம் திரிபுரா மாநிலத்தில் வரும் 9ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் பட்டுள்ளது. தலைமைச் செயலர் குமார் அலோக் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். வரும் ஜூலை 9ஆம் தேதி வரை அன்றாடம் மதியம் 2 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். அதிலும் குறிப்பாக அகர்தலா, ராணிர்பஜார், உதய்பூர், கைலாஷாஹர், தாராநகர், கோவாஇ, பெலோனியா ஆகிய 9 நகரங்களில் இந்த ஊரடங்கு அமல்படுத்துப்பட்டுள்ளது. இருப்பினும், மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்குத் தடையில்லை. ஷாப்பிங் மால்கள் இயங்க அனுமதியில்லை.


அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் மாலை 4 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் மதியம் 2 மணி வரை இயங்கலாம். மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது அந்த நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் மிகுந்த ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அரசின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

Similar News