மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு புதிய கொள்கை - யோகி அரசாங்கம் அதிரடி!

Update: 2021-07-09 10:45 GMT

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கம், 2021-30 மக்கள் தொகை கட்டுப்பாடுகள் குறித்த புதிய கொள்கைகளை ஜூலை 11 உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு வெளியிடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்த சமூகம் சார்ந்த அணுகுமுறைக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். இதனால் மாநிலத்தில் மக்களுக்குச் சிறந்த வசதிகள் கிடைக்ககூடும் எனவும் மாநிலத்தை முறையாக முன்னேற்ற முடியும் என்று தெரிவித்தார்.

"வறுமை மற்றும் கல்வியறிவு இல்லாததே மக்கள் தொகை அதிகரிப்புக்குக் காரணம். சில சமூகத்தினரிடையே மக்கள் தொகை விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது. எனவே சமூகத்தை மையமாகக் கொண்ட விழிப்புணர்வு தேவை," என்று அவர் அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

தற்போது மாநிலத்தின் மக்கள் தொகை எண்ணிக்கை 2.7 சதவீதமாக உள்ளது. இது 2.1 சதவீதத்திற்கும் கீழ் இருக்க வேண்டும் என்று அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரைத் தவிர பல்வேறு மாநிலங்கள் இந்த இலக்கை அடைந்துள்ளது. மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த ஐந்தாண்டுகள் கொண்ட திட்டத்தை இந்த கொள்கை பின்பற்றும். இது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் குழந்தை மற்றும் தாய்வழி இறப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தும் என்று தெரிவித்தார்.

இந்த கொள்கையின் மறுபுறத்தில் வயதானவர்களைப் பராமரிப்பதற்கான விரிவான திட்டமும் மேற்கொள்ளப்படும், மேலும் 11முதல் 19 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினருக்கு ஆரோக்கியம், ஊட்டச்சத்து மற்றும் கல்வி குறித்தவற்றிலும் கவனம் செலுத்தும்.

பள்ளிகளில் சுகாதார மையங்கள் அமைக்கப்படும் மற்றும் பிறந்த குழந்தைகள், இளம்வயதினர் மற்றும் முதியவர்கள் குறித்து டிஜிட்டல் ட்ராக்கிங் செய்யப்படும்.

இதற்கிடையில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு உட்படப் பல அறிக்கைகளைப் படித்து மாநிலத்தின் மக்கள் தொகை கொள்கை தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையின் கூடுதல் செயலாளர் அமித் மோகன் பிரசாத் தெரிவித்தார்.

NFHS-05 விரைவில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது, எனவே இலக்குகள் 2026 மற்றும் 2030 என்ற இரண்டு கட்டங்களாக வெளியிடப்படும்.


இதற்கிடையில், மாநிலத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை குறித்துச் சரிபார்க்க வரைவு சட்டம் ஒன்றை உத்தரப் பிரதேசத்தின் சட்ட ஆணையத்தின் தலைமை நீதிபதி A N மிட்டல் உருவாக்கி வருகிறார். "அடுத்த இரண்டு மாதங்களில் வரைவு சட்டம் தயாரிக்கப்படும் மற்றும் அந்த அறிக்கை மாநில அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்படும்," என்று நீதிபதி மிட்டல் கூறினார்.

Source: ஸ்வராஜ்யா

Similar News