கொரோனா மூன்றாவது அலை இந்தியாவில் இருக்குமோ? நிபுணர்களின் என்ன சொல்கின்றனர்?

Update: 2021-07-26 12:53 GMT

இந்தியாவில் கொரோனா தொற்றின் மூன்றாவது அலை எப்போது தொடங்கும்? மற்றும் அதன் பாதிப்புகள் எவ்வாறு? இருக்கும் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது. எனவே இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் பல்வேறு தரப்பில் ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தற்பொழுது மருத்துவ நிபுணர்கள் மூன்றாம் அலையின் பாதிப்பு எவ்வாறு இருக்கும் என்பது குறித்து தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். 


முதலாவதாக, மவுலானா ஆசாத் மருத்துவ கல்லூரி சமூக மருத்துவ துறை பேராசிரியை பிரக்யா சர்மா அவர்கள் இதுபற்றி கூறுகையில், "மூன்றாவது அலை நிச்சயமான ஒன்று. ஊரடங்கு விதிமுறைகளை நடைமுறைப் படுத்துவதையும், தடுப்பூசி போடுவதையும் பொறுத்துதான் பாதிப்பு அமையும். ஆனால் பொதுமக்கள் தற்பொழுது முகக்கவசம் அணிவதில்லை அல்லது சரியாக அணிவதில்லை. எனவே மக்களுடைய நடவடிக்கைகள் மூலம்தான் இவற்றின் பாதிப்பு இருக்கும்" என்று அவர் கூறினார். 


மேலும் சர்கங்காராம் மருத்துவமனையின் மருத்துவ துறை மூத்த ஆலோசகர் டாக்டர் பூஜா கோஸ்லா கூறுகையில், "உலகின் பல பகுதிகளில் இருந்தும் எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இந்தியாவிலும் உள்ளது. ஊரடங்கை தளர்த்தி அனைத்தையும் திறந்து விடுவது நல்லதல்ல. 3வது அலை விரைவில் வரலாம்" என்று அவர் கூறினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலை சேர்ந்த டாக்டர் சமிரன் பாண்டா கூறுகையில், "2வது அலையைப் போன்று 3வது அலை மோசமாக இருக்காது. புதிய உருமாறிய வைரஸ்கள் வந்தால், அதுவும் எதிர்ப்பு சக்தியில் இருந்து அவை தப்பினால் தான் 3வது அலை நம்பத்தகுந்ததாக அமையும். 3வது அலையின் தாக்கத்தைத் தணிக்க தடுப்பூசிகள் போடுவது அதிகரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார். 

Similar News