கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரம் பின்னுக்கு தள்ளப்படுமா? அதிர்ச்சி ரிப்போர்ட்.!

Update: 2021-07-28 14:18 GMT

ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சிக்கும் அந்த நாட்டில் உள்ள பொருளாதாரம் மிகப் பெரிய பங்கு வகிக்கும். குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளில் பொருளாதாரம் சாதகமான சூழ் நிலையில் இருந்தால் தான், அது வளர்ச்சி அடைந்த நாடுகளில் ஒன்றாக ஆக முடியும். அந்த வகையில் தற்போது இந்தியாவிற்கு இந்த கொரோனா காலகட்டத்தில் சாதகமான பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதா? இல்லையா? மற்றும் உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் எவ்வளவு? முன்னேற வேண்டும் என்பது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச நிதி அமைப்பு(IMF)தற்பொழுது ஒரு ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. 


ஊரடங்கு காலகட்டங்களில் தொழில் வளர்ச்சியில் எந்த ஒரு சரிவையும் ஏற்படக் கூடாது என்பதற்காக மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தது. ஆனால் முதல் அலையில் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரண்டாம் அலையில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் வாயிலாக கொஞ்சம், கொஞ்சமாக தற்பொழுது பொருளாதாரம் பழைய நிலைமைக்கு திரும்பி வருகிறது. இருந்தாலும் மீண்டும் ஒரு நிலையான வளர்ச்சிக்கு சில ஆண்டுகள் எடுக்கத்தான் ஆக வேண்டுமாம் என்று IMF கூறியுள்ளது. 


பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடுகள் வைரஸ் தாக்கத்திலிருந்து வேகமாக மீண்டும் வருவதாக IMF தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதம் துவங்கி மே மாதம் வரை இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்துள்ளதாக ஜூன் மாதத்திலிருந்து சரிவில் இருந்து மீண்டு வருவதாகவும் கூறியுள்ளது.

12.5% மொத்த கொள்முதல் உற்பத்தி வளர்ச்சியை இந்தியா இந்த ஆண்டு எட்டும் என IMF பொருளாதார நிபுணர்கள் முன்னதாகக் கணித்து உள்ளார்கள். இந்தியா மட்டுமல்லாமல் இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் தாக்கம் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். 

Similar News