இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா வைரஸ்: மத்திய அரசு தகவல்!

இந்தியாவில் கடந்த சில நாட்களாக பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-05 14:04 GMT

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது இரண்டாம் அலை முடிவு பெற்று உள்ளே நிலையில், அடுத்து நிச்சயம் மூன்றாம் அலை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள். அந்த பாதையில் தற்பொழுது நோய்த்தொற்று காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து 5-வது நாளாக அதிகரித்துள்ளது. கடந்து 24 மணி நேரத்தில் புதிதாக 42000 பேர் பாதிக்கப்பட்டனர், 308 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 


இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் இது பற்றிக் கூறுகையில், "கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக 42 ஆயிரத்து 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 29 லட்சத்து 88 ஆயிரத்து 673 ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்து 10 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கூடுதலாக 4 ஆயிரத்து 367 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5-வது நாளாக சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


எனவே இதன் காரணமாக தற்பொழுது, ஒட்டுமொத்த பாதிப்பில் சிகிச்சையில் இருப்போர் 1.24 சதவீதமாக அதிகரித்துள்ளனர். கொரோனாவிலிருந்து இதுவரை 3 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 91 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 97.42 ஆகக் குறைந்துள்ளது. இதுவரை இந்தியாவில் ஏறக்குறைய 68.46 கோடி பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த முடியும்" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Input & Image courtesy: Times of India

Tags:    

Similar News