தசரா விழாவில் மாற்றுமத பிரச்சாரம்., அதிர்ச்சியில் இந்துக்கள்..!

தசரா விழாவில் வேற்றுமத பிரச்சாரம் செய்தது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Update: 2021-10-10 02:00 GMT

இந்துக்கள் பண்டிகையில் தசரா பண்டிகை மிக முக்கிய இடத்தை பெறுகிறது. இந்த நாளில் அம்மனை வழிப்பட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஆந்திர மாநில விஜயவாடாவில் உள்ள இந்திர கீலாத்ரி என்ற அழைக்கப்படும் துர்க்கை கோவிலில் தசரா விழா விமர்ச்சையாக தொடங்கியது. பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக அலைமோதியது.

அங்கு கோவிலில் நடைபெறும் சிறப்பு பூஜைகள், விஐபிகள் வருகைகள் குறித்து விவரிப்பதற்காக அங்காங்கே தொலைகாட்சி அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

அப்போது அந்த தொலைகாட்சிகளில் திடீரென எந்த வித சம்பந்தமும் இன்றி வேற்று மத பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர் சுமார் 15 நிமிடங்கள் வரை இந்த பிரச்சாரம் நடைபெற்றது. இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டுள்ளனர்.

Source: The Hindu

Tags:    

Similar News