ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கும் பொழுது வளர்ச்சி பெறும்!- எல்லை பாதுகாப்பு எழுச்சி தின விழாவில் அமித்ஷா பேச்சு!

ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கின்றபோதுதான் வளர்ச்சி பெறுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

Update: 2021-12-05 12:06 GMT

ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கின்றபோதுதான் வளர்ச்சி பெறுகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.


ராஜஸ்தானில் எல்லை பாதுகாப்பு படையின் 57வது எழுதிச்சி தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசியதாவது: ஒரு நாடு பாதுகாப்பாக இருக்கின்றபோது தான், வளர்ச்சி பெறுவதுடன் முன்னேற்ற பாதையிலும் செல்கிறது. நாட்டின் பாதுகாப்பை நீங்கள் உறுதி செய்கின்றீர்கள். எனவே உங்களின் பணியை எப்போதும் நாங்கள் நினைவில் கொண்டிருப்போம்.

மேலும், எல்லை பாதுகாப்பு படையினருக்கு விரைவில் நவீன தொழில்நுட்ப வசதிகள் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்யும். இதற்காக மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. நமது எல்லையில் டுரோன்கள் மூலம் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் வருகிறது. எனவே டுரோன்களுக்கு எதிராக செயல்படுவதற்கு பி.எஸ்.எப்., டி.ஆர்.டி.ஓ மற்றும் என்.எஸ்.ஜி. இணைந்து புதிய தொழில்நுட்பத்தை தயாரித்து வருகின்றது. விரைவில் எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைகும்.

நாட்டின் பிரதமராக மோடி பதவியேற்றதும், நமது எல்லையில் ஊடுருபவர்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு உடனடி பதிலடி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter


Tags:    

Similar News