நீண்ட ஆயுளையும், நல்ல உடல்நலத்தையும் கடவுள் அளிக்கட்டும்: நடிகர் ரஜினிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!
நீண்ட ஆயுளையும், நல்ல உடல் நலத்தையும் கடவுள் அளிக்கட்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடி மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

A very happy birthday to @rajinikanth Ji. May he keep inspiring people with his creativity and phenomenal acting. May Almighty bless him with a long and healthy life.
— Narendra Modi (@narendramodi) December 12, 2021
நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று (டிசம்பர் 12) 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனையொட்டி அவரது ரசிகர்கள் நேற்று இரவு 12 மணிக்கு சென்னை போயஸ்கார்டன் வீடு முன்பாக கேக் வெட்டி உற்சாகமாக கொண்டாடினர். அது மட்டுமின்றி ஹாப்பி பர்த்டே தலைவா என்ற கோஷங்களையும் எழுப்பினர். அது மட்டுமின்றி இன்று காலை பல்வேறு இடங்களில் அன்னதானத்தை அவரது ரசிகர்கள் வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்து செய்தியில், ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள். தனது திறமையான நடிப்பு, படைப்பாற்றல் மூலம் மக்களை தொடர்ந்து அவர் ஊக்கப்படுத்தட்டும். அவருக்க நீண்ட வாழ்நாளையும், நல்ல உடல்நிலையையும் கடவுள் வழங்கட்டும். இவ்வாறு அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Source: Twiter
Image Courtesy:India Today