காசி விஸ்வநாதர் கோயிலை திறந்த பின்னர் கங்கையில் புனித நீராடிய பிரதமர் மோடி!

பிரத்யேகமாக புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்த பின்னர் கங்கை நதிக்கரையில் புனித நீராடினார். அவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச போலீசார் செய்திருந்தனர்.

Update: 2021-12-13 09:54 GMT

பிரத்யேகமாக புனரமைக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயிலை திறந்து வைத்த பின்னர் கங்கை நதிக்கரையில் புனித நீராடினார். அவர் வருகையை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச போலீசார் செய்திருந்தனர். உத்தர பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசி அமைந்துள்ளது. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலை புனரமைக்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த பக்தர்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இதனிடையே பிரதமர் மோடி உத்தரவின் பேரில் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டது. இந்த கோயில் பிரதமர் மோடியின் கனவாக கருதப்படும் இந்த திட்டத்தின் கீழ் நதிக்கரையில் இருந்து கோயிலை இணைக்கும் விஸ்வநாதர் கோயில் வரை 320 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும் உடைய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலில் மிக பிரமாண்ட அருங்காட்சியகம், நூலகம், பக்தர்கள் தங்குவதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது.


இன்று உத்தரபிரதேச மாநிலத்தில் சென்ற பிரதமர் மோடிக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சிறப்பான வரவேற்பை அளித்தார். அங்கிருந்து கால பைரவர் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி ஆரத்தி எடுத்து வழிப்பட்டார். இதனையடுத்து படகில் சென்ற அவர் கங்கை, நதியில் புனித நீராடி, இறைவனை வழிப்பட்டார்.

Source: Dinamalar

Image Courtesy: ANI


Tags:    

Similar News