மத்திய அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையீடு இல்லை: மோகன் பகவத் பேச்சு!

மத்திய அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவதில்லை என்று அந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

Update: 2021-12-19 10:34 GMT

மத்திய அரசு நிர்வாகத்தில் ஆர்.எஸ்.எஸ். தலையிடுவதில்லை என்று அந்த அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

இமாசல பிரதேசம் தர்மசாலாவில் முன்னாள் ராணுவத்தினர் நடத்திய நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். அதன் பின்னர் அவர் பேசியதாவது: பாஜக தலைமையில் நடைபெறுகின்ற மத்திய அரசை ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்படுத்துவதில்லை. அதன் நிர்வாகத்திலும் தலையிடுவதில்லை.

மேலும், பாஜகவுடைய கொள்கைகள் வேறு. அக்கட்சியின் செயல்பாட்டு முறை என்பது வேறு. அதனை செயல்படுத்திக் கொண்டிருப்பவர்களும் வேறு. அதே சமயத்தில் பாஜகவில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளனர். அது மட்டும்தான் ஆர்.எஸ்.எஸ்.க்கும் பாஜகவுக்கும் இடையில் உள்ள தொடர்பு. மற்றபடி ஊடகங்கள் சொல்வது போன்று நாங்கள் பாஜகவை இயக்கும் ரிமோட் இல்லை. மத்திய அரசு எப்போதும் ஆர்.எஸ்.எஸ்.க்கும் எதிராகவே உள்ளது. எங்களின் அமைப்பு 96 ஆண்டுகளாக பல்வேறு தடைகளை தாண்டி செயல்பட்டு வருகின்றது. சமூகத்திற்கு ஒரு தேவை என்றால் நாங்கள் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். அவர்களுக்காக நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்வோம். இவ்வாறு அவர் பேசினார்.

Source: Daily Thanthi

Image Courtesy: Times Of India

https://www.dailythanthi.com/News/TopNews/2021/12/19133219/For-40000-Years-DNA-Of-All-People-In-India-Has-Been.vpf

Tags:    

Similar News