விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்ஷியின் சொத்துக்கள் விற்கப்பட்டு பெரும் கடன் தொகை மீட்பு! - மத்திய நிதியமைச்சர் தகவல்!
வங்கியில் கடனை பெற்றுக்கொண்டு அதனை முறையாக செலுத்தாமல் நாட்டை விட்டு தப்பியோடி விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக் ஷி உள்ளிட்டோரின் சொத்துக்கள் ரூ.13 ஆயிரத்து 100 கோடி ரூபாயிக்கு விற்கப்பட்டு அதன் மூலமாக கடன் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் கூறியுள்ளார்.

கடந்த கால காங்கிரஸ் ஆட்சியின்போது, தொழிலதிபர்களான நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையா, மெகுல் சோக் ஷி உள்ளிட்டோர் மோசடியாக வங்கியில் கடனை பெற்றனர். ஆனால் அவர்கள் அதற்கான வட்டி மற்றும் முதலை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனர். ஒரு கட்டத்தில் கடனை கட்டாமல் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தப்பியோடி விட்டனர். இதனிடையே மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பின்னர் வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களின் சொத்துக்களை ஏலம் விட்டு அதன் மூலமாக கடனை அடைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வந்தது.
இந்நிலையில், நாடாளுமன்றத்தில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது பதில் அளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜூலை மாதம் விஜய் மல்லையாவின் மற்றும் நிரவ் மோடி உள்ளிட்டோர்களின் சொத்துக்கள் விற்பனை செய்யப்பட்டு ரூ.792 கோடி மீட்கப்பட்டுள்ளது. அதே போன்று கடந்த ஏழு வருடங்களாக வங்கிகளில் சுமார் 5 லட்சத்து 49 ஆயிரம் கோடி கடன்கள் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டினார். அது மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களிடம் இருந்து பணம் வசூல் செய்யப்பட்டு முறையாக வங்கிகளில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Source: Polimer
Image Courtesy: OrissaPost