இனிமேல் இன்டர்நெட் இல்லாமல் பணம் அனுப்பலாம்: ரிசர்வ் வங்கியின் சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை அதிகரிப்பதற்கு பல்வேறு வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் கிராமப் பகுதிகளில் எளிய மக்களிடம் போதுமான அளவுக்கு இன்னும் சென்று சேரவில்லை என கூறலாம்.

இந்நிலையில், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதறகாக ஆப்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை தற்போது ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இதனால் இண்டர்நெட் வசதி மற்றும் மொபைல் நெட்வொர்க் இல்லாமலேயே பணத்தை அனுப்பும் வழிமுறையாகும்.
அதாவது ஆப்லைன் பரிமாற்றத்தில் பணத்தை 'பேஸ் டு பேஸ்§ என்ற பிராக்ஸி மோடில் கார்டு, வாலட், மொபைல் போன் போன்றவற்றின் வழிமுறையில் அனுப்பலாம். இதற்கு ஓடிபி தேவைப்படாது. இதில் அதிகபட்சமாக ரூ.2000 வரை அனுப்பும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Source: Dinamalar
Image Courtesy: BBC