பஞ்சாபில் 'பிரதமர் மோடியை' கொல்ல வெளிநாட்டு சதி? விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Update: 2022-01-11 03:46 GMT

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடி சென்றபோது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டது. இது உலகளவில் மிகப்பெரிய விவாதமாகவும் மாறியுள்ளது. இது பற்றி உச்சநீதிமன்றம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில், பிரதமர் பயணத்தின்போது ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து டெல்லியைச் சேர்ந்த சில மூத்த வழக்கறிஞர்களின் செல்போன் எண்களுக்கு பிரிட்டனில் இருந்து சீக்கியருக்கு நீதி என்கின்ற அமைப்பில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட வாசகங்கள் அந்த அழைப்பில் ஒலிபரப்பப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி பயணத்தின்போது தடை ஏற்படுத்தியது நாங்கள்தான். அதற்காக நாங்கள் பொறுப்பேற்கிறோம். கடந்த 1984ம் ஆண்டு சிக்கியர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்காத உச்சநீதிமன்றம் இந்த சம்பவத்தை விசாரிக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ் அரசு உள்ளூர் போராட்டக்காரர்கள்தான் வந்தார்கள் என்று சொல்லிய நிலையில், தற்போது வெளிநாட்டு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது மிகப்பெரிய சதிவலை இருப்பது தெரியவந்துள்ளது. பிரதமர் மோடி பயணத்தின்போது போராட்டக்காரர்கள் போர்வையில் சிலர் ஊடுருவி கொலை செய்யவும் தயங்கியிருக்க மாட்டார்கள் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இது பற்றி முறையான நீதி விசாரணை நடைபெற்றால் இந்தியாவில் இருந்து யார், யார் ஈடுபட்டார்கள் என்ற உண்மைகள் வெளிவரவும் வாய்ப்பு உள்ளது. இந்தியாவிற்காக இரவு, பகலாக உழைத்து வரும் பிரதமர் மோடியின் பாதுகாப்பை பஞ்சாப் காங்கிரஸ் அரசு வேண்டும் என்றே உதாசனப்படுத்தியுள்ளது இதன் மூலம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

Source: Dinamalar

Image Courtesy: Republic World

Tags:    

Similar News