இந்தியாவின் தடுப்பூசி திட்டம் இன்றுடன் ஓராண்டு நிறைவு! வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய நாள்!

Update: 2022-01-16 07:02 GMT

இந்தியாவின் மாபெரும் வெற்றிகரமான கொரோனா தடுப்பூசி இயக்கம், தொடங்கப்பட்டு இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாடும் வகையில் சமூக வலைத்தளங்களில், மத்திய பா.ஜ.க அரசை  பலரும்  பாராட்டி வருகின்றனர். 


2019 மார்ச் மாதத்தில் இருந்து உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது இந்த கொரோனா பெருந்தொற்று, இந்த தொற்றிலிருந்து   தற்காத்துக் கொள்ள, வல்லரசு நாடுகளில் தடுப்பூசிகள் தயாரித்து அவர்களது நாட்டுமக்களுக்கு செலுத்தத் தொடங்கினர் . பிற வளர்ந்து வரும் நாடுகள்,  வளர்ந்த நாடுகளிடமிருந்து தடுப்பூசிகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கையில்,


இந்தியா தன் சொந்த நாட்டிலேயே இரண்டு தடுப்பூசிகளை தயாரித்து சாதித்துக்காட்டியது , இதே நாளில் கடந்த ஆண்டு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு, நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் மிகப்பெரிய திட்டத்தை தொடங்கியது.


கடந்த ஓராண்டில் மத்திய பா.ஜ.க அரசு கொண்டு வந்த இந்த மாபெரும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் உலக வல்லரசு நாடுகளை மிரள வைத்துள்ளது. அதன் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:

நாட்டின் மக்கள் தொகையில், 92 சதவிகிதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மக்கள் தொகையில் 70 சதவிகிதம் மக்கள், இரண்டு டோஸ் தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டனர்.

மக்களுக்கு 156 கோடி தடுப்பூசிகள்  செலுத்தப்பட்டுள்ளது.

15 வயது முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு, இந்த வருடம் ஜனவரி 3 முதல் அடுத்த 11 நாட்களில் 3.25 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

இந்த சாதனையை கொண்டாடும் வகையில்  பா.ஜ.க எம்.எல்.ஏ திருமதி வானதி சீனிவாசன் அவர்கள் தன் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: சொந்த தடுப்பூசிகளை உருவாக்குவது மற்றும் தயாரிப்பது முதல், அதிவேக தடுப்பூசி இயக்கத்தை இயக்குவது வரை, பிரதமரின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் ஒவ்வொரு துன்பத்தையும் அசாத்திய வலிமையுடன் எதிர்கொள்ளும் திறனை இந்த நாடு வெளிப்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News