காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய மோசடி ஒப்பந்தம் ! நிதியமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Update: 2022-01-19 02:51 GMT

முன்பு காங்கிரஸ் ஆட்சியில் 'தேவாஸ் மல்டிமீடியா' நிறுவனத்திற்கு குறைந்த கட்டணத்தில் அகண்ட அலைவரிசையை ஒதுக்கி மிகப்பெரிய மோசடி செய்திருப்பதனை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஆன்ட்ரிக்ஸ், 2005 ம் ஆண்டு எஸ் பேண்டு அகண்ட அலைவரிசை ஒதுக்கீடு குறித்து தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது 2011ம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்டர் ஏலத்தில் மோசடி காரணமாகவும், தேசப் பாதுகாப்பு மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கு எஸ் பேண்டு அலைவரிசை தேவைப்படுவதாக கூறி, தேவாஸ் ஆன்ட்ரிக்ஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது தேவாஸ் மல்டிமீடியா நிறுவனத்திற்கு குறைந்த தொகைக்கு அகண்ட அலைவரிசை ஒதுக்கி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மக்களுக்கு மட்டுமின்றி நமது தேசத்திற்கும் எதிராக செய்த மோசடி ஒப்பந்தம் ஆகும். மோசடி நோக்கத்துடன் செயல்பட்ட இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது சரியே என்று உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பில் கூறியுள்ளது.

முன்பு இருந்த காங்கிரஸ் அரசு செய்த தவறால் மக்களின் வரிப்பணத்தை காக்க தற்போதைய மத்திய அரசு ஒவ்வொரு நீதிமன்றங்களிலும் போராட்டம் நடத்தி வருகிறது. இது போன்று இல்லையெனில் தேவாஸ் போன்ற மோசடி வழக்குகளில் இழப்பீடாக வரி செலுத்துவோர்களின் பணத்தை அளித்திருக்க வாய்ப்பு இருந்திருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: News 18

Tags:    

Similar News