வழித்தவறி போன அருணாச்சல பிரதேச சிறுவனை இந்தியாவிடம் ஒப்படைத்த சீனா: மத்திய அமைச்சர் தகவல்!
அருணாச்சல பிரதேச மாநில எல்லையோரத்தில் காணாமல் போன மிரம் தரோன் 17, என்ற சிறுவனை இந்திய ராணுவத்திடம் சீனா ராணுவம் ஒப்படைத்திருப்பதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அருணாச்சல பிரதேசத்தை மிரன் தரோன் என்ற சிறுவன் இந்திய, சீன எல்லையில் காணாமல் போனார். இந்த சிறுவனை சீன ராணுவம்தான் கடத்தி விட்டது என்ற தகவல்கள் பரவியது. இதே தகவலை எம்.பி., தபீர் கவோ கூறியிருந்தார்.
இது குறித்து இந்திய ராணுவ அதிகாரிகள் கூறும்போது, சீன ராணுவத்தினரை தொடர்பு கொண்டு விபரத்தை கூறியுள்ளோம். மூலிகை சேகரிக்கவும், வேட்டையாடவும் வந்த சிறுவன் வழிதவறி காணாமல் போனதாக கூறியுள்ளனர். மேலும், காணாமல் போன சிறுவனை கண்டுப்பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கிரண் ரிஜ்ஜூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சீன ராணுவம் மிரம் தரோன் என்ற சிறுவனை இந்திய ராணுவத்திடம் ஒப்டைத்துள்ளது. சிறுவனுக்கு மருத்துவ பரிசோதனை செய்த பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar