கென்யா முன்னாள் பிரதமர் மகளுக்கு ஆயுர்வேத சிகிச்சையால் கண்பார்வை: கென்யாவில் ஆயுர்வேத மையம் தொடங்க பிரதமர் மோடியிடம் கோரிக்கை!

Update: 2022-02-14 06:09 GMT

ஆயுர்வேத சிகிச்சையால் தனது மகளுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்ததை தொடர்ந்து கென்ய முன்னாள் பிரதமர் ராய்லா ஒடிங்கா, தங்களது நாட்டில் ஆயுர்வேத சிகிச்சை மையத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளார்.

கென்யாவில் கடந்த 2008 முதல் 2013ம் ஆண்டு வரைக்கும் பிரதமராக ராய்லா ஒடிங்கா பதவி வகித்து வந்தார். இவரது மகள் ரோஸ்மேரிக்குப் நரம்பு பாதிப்பு காரணமாக கடந்த 2017ம் ஆண்டு பார்வை பறிபோனது. இதனால் பல்வேறு நாடுகளில் அவரது மகளை அழைத்துக் கொண்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. இதனிடையே கேரளா மாநிலத்தில் கொச்சியில் அமைந்துள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மருத்துவர்கள் ஆயுர்வேத முறையில் சிகிச்சை அளித்தனர். இதனால் பறிபோன பார்வை மீண்டும் கிடைத்தது.

இந்நிலையில், ஆயுர்வேத சிகிச்யை£ல் தனது மகளுக்கு கண்பார்வை கிடைத்ததை தொடர்ந்து இந்திய பிரதமர் மோடியிடம், முன்னாள் கென்யா பிரதமர் ராய்லா ஒடிங்கா சந்தித்து பேசினார். அப்போது தங்களது நாட்டிலும் ஆயுர்வேத சிகிச்சை மையத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளார். அவரது கோரிக்கையை பிரதமர் மோடி பரிசீலனை செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News