இந்திய மருத்துவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வருகிறது "ஹீல் பை இந்தியா"

Update: 2022-02-21 14:01 GMT

மத்திய நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இந்திய மருத்துவத் துறையை உலகிலேயே முன்னிலையான மருத்துவ துறையாக மாற்ற  'ஹீல் பை இந்தியா' என்ற ஒரு முன்னெடுப்பை எடுத்துள்ளது.


மத்தியில் 2014'இல் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு அமைந்தது முதல் நாட்டின் பல நலத் திட்டங்களை அமல்படுத்தி வருகின்றது. இதன் மூலம் நாட்டின் அனைத்துத் துறைகளும் வளர்ச்சிப் பாதையில் சென்று வருகிறது.


அதில் முக்கியமாக மருத்துவத்துறை, உலகமே வியக்கும் வகையில் கடந்த 7 ஆண்டுகளாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. வளர்ச்சி மற்றும் இல்லாமல் தரத்திலும் இந்திய மருத்துவத் துறை சிறந்து விளங்கி வருகிறது.


இதன் அடுத்த கட்டமாக 'ஹீல் பை இந்தியா' என்ற முன்னெடுப்பு மூலம் உலகின் சிறந்த மருத்துவத்தை இந்தியா வழங்கும் என்ற இலக்குடன் பயணப்பட உள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : இந்தியா உலகத்தில் உள்ள அனைத்து  திறமைமிக்க மருத்துவர்களுக்கு  மருத்துவத்தில் பயிற்சி இடமாக இந்தியா  மாற வேண்டும்.


மேலும் நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

SWARAJYA

Similar News