உக்ரைன் ரஷ்யா போர் விவகாரம் ஆதரவுக்கரம் நீட்டும் இந்தியா

Update: 2022-02-24 13:30 GMT

உக்ரைன், ரஷ்யா போர் விவகாரத்தில் நடுநிலையாக இருப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் எனவும் இந்தியா அறிவித்துள்ளது.


முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் 'நேட்டோ' அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா-உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் ஒன்றரை லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைனுக்கு ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கும் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளன.


இந்நிலையில் 'உக்ரைன் ராணுவ நடவடிக்கையை கைவிட வேண்டும் என உக்ரைன் நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் நுழைந்துள்ளனர்' என புதின் கூறியுள்ளார். தொடர்ந்து உக்ரைன் மீது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய படைகளுக்கு விளாதிமிர் புதின் உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷ்யப் படைகள் உக்ரைனில் பல்வேறு நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருகின்றன.


இப்படிப்பட்ட சூழலில் உக்ரைனில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து தொடர்ந்து விசாரித்து வருவதாக மத்திய அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களை மீட்கச் சென்ற ஏர் இந்தியா விமானம் குண்டு வீச்சு காரணமாக திரும்பி வந்துள்ளது இதனால் இந்தியர்களின் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்நிலையில் இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் கூறியதாவது "ரஷ்யாவுடன் இந்தியா நல்ல உறவைக் கொண்டுள்ளது உக்ரைன் நிலையை சரி செய்ய ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி ஜெலன்ஸ்கி ஆகியோரை பிரதமர் மோடி உடனடியாக தொடர்பு கொள்ள வேண்டும் எனக் கூறினார். மேலும் உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களுக்காக 24 மணி நேர அவசர உதவி எண்ணை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.


+380 997300428, +380 997300483 என்ற எண்களில் தொடர்பு கொள்வதன் மூலம் 24 மணி நேர அவசர உதவி பெறலாம் என உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்தியா அறிவித்துள்ளது.


மேலும் உக்ரைன்-ரஷ்யா விவகாரம் கவலை அளிப்பதாகவும் இந்த விவகாரத்தில் நடுநிலை காப்பதாகவும், அமைதியான தீர்வு ஏற்படும் என நம்புவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.


Source - Daily Thanthi

Similar News