உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்கள் மத்திய அரசுக்கு நன்றி!

உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் மேலும் 688 இந்தியர்கள் உட்பட மாணவர்களும் ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் நேற்று (பிப்ரவரி 27) நாடு திரும்பினர்.

Update: 2022-02-28 06:48 GMT

உக்ரைனில் சிக்கியுள்ளவர்கள் மேலும் 688 இந்தியர்கள் உட்பட மாணவர்களும் ஏர் இந்தியா சிறப்பு விமானத்தில் நேற்று (பிப்ரவரி 27) நாடு திரும்பினர்.

உக்ரைன் நாடு நேட்டோவில் சேர இருப்பதை அறிந்த ரஷ்யா அந்நாட்டு மீது போர் நடத்தி வருகிறது. இதனால் அங்கிருந்த இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினர் பலர் சிக்கியுள்ளனர். அது போன்று சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இரவு, பகலாக ஏர் இந்தியா விமானத்தை அனுப்பி மத்திய அரசு மாணவர்களையும், இந்தியர்களையும் மீட்டு வருகிறது.

இதுவரைக்கும் 4 சிறப்பு விமானங்களில் இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அதன்படி நேற்று மேலும் 688 இந்தியர்கள் நாடு திரும்பினர். ருமேனியாவின் புகாரெஸ்டில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா வரவேற்றார். அதன் பின்னர் தங்களை பத்திரமாக மீட்ட மத்திய அரசுக்கு மாணவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Source: Dinamalar

Image Courtesy: Twiter

Tags:    

Similar News