பிரதமரின் தாயார் எடைக்கு சமமான தங்கம் கோயிலுக்கு நன்கொடை!

பிரதமர் மோடியின் தாயார் எடைக்கு சமமான 60 கிலோ தங்கத்தை உத்தரபிரதேச மாநிலம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

Update: 2022-03-02 13:35 GMT

பிரதமர் மோடியின் தாயார் எடைக்கு சமமான 60 கிலோ தங்கத்தை உத்தரபிரதேச மாநிலம், காசி விஸ்வநாதர் கோயிலுக்கு தொழிலதிபர் ஒருவர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உத்தர பிரதேசம், வாரணாசியில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில் புதுப்பொழிவுடன் காட்சி அளிக்கிறது. அக்கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெனின் எடைக்கு சமமான தங்கத்தை காசி விஸ்வநாதர் கோயிலுக்கு நன்கொடையாக ஒரு தொழிலதிபர் வழங்கியுள்ளார். அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News