பாகிஸ்தானில் தவறுதலாக விழுந்த இந்திய ஏவுகணை: பாதுகாப்புத்துறை அமைச்சர் விளக்கம்!

Update: 2022-03-15 11:59 GMT

பாகிஸ்தானில் தவறுதலாகத்தான் இந்திய ஏவுகணை விழுந்தது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ராஜ்யசபாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய எல்லையில் இருந்து ஏவப்பட்ட சூப்பர் சோனிக் வகையை சேர்ந்த ராக்கெட் ஒன்று பாகிஸ்தானில் சுமார் 124 கி.மீ. தொலைவில் விழுந்ததாக அந்நாட்டு ராணுவம் கூறியிருந்தது. இது பற்றி இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டார். அதன்படி இன்று ராஜ்நாத் சிங் அளித்துள்ள பதிலில், விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடியும் பட்சத்தில் விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவரும்.

மேலும், ஏவுகணை அமைப்பு மிகுந்த நம்பகமானது. பாதுகாப்பாக உள்ளது என்பதை இந்த சபைக்கு உறுதி அளிக்கிறேன். பாதுகாப்பு நடைமுறைகள் அடிக்கடி மதிப்பாய்வு செய்யப்படுகிறது. நமது ஆயுதப் படையில் இருப்பவர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். அவர்கள் ஆயுதங்களை கையாள்வதில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர்கள். ஆனாலும் ஏவுகனை பாகிஸ்தானில் விழுந்தது பின்னர்தான் தெரிந்தது. இந்த சம்பவம் வருத்தத்தை அளிக்கிறது. இது பற்றிய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News