குஜராத் மாநிலத்தை போன்று கர்நாடகா கல்வி நிலையங்களில் பகவத் கீதை இடம் பெறும் என்று கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு நாகேஷ் அளித்த பேட்டியில்; குஜராத்தில் நான்கு கட்டங்களாக 'மாரல் சயின்ஸ்' என்கின்ற அறநெறி பாடத்தை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளனர். அதில் முதலாவதாக பகவத் கீதையை சேர்க்க உள்ளனர். இது எனக்கு பிடித்துள்ளது எனவே முதலமைச்சருடன் ஆலோசனை நடத்திய பின்னர் இதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பகவத் கீதையை படிக்கும்போது மாணவர்களின் மனது நல்வழிப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar