கடந்த 2018ம் ஆண்டு முதல் எல்லைக் கோடு அமைந்துள்ள வழியாக பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுவல் வெகுவாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு தகவலை கூறியுள்ளது.
இது குறித்து லோக்சபாவில் எம்.பி., ரஞ்சன்பென் தனஞ்செய் பட் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
கடந்த 2018ம் ஆண்டு முதல் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு வழியாக காஷ்மீருக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவல் வெகுவாக குறைந்திருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 366 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். மேலும், பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுப்பதற்காக ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பில் இருப்பதற்கான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.
Source: Dinamalar
Image Courtesy: Mint