அமெரிக்கா அழுத்தத்தால் இந்தியா மீதான உறவு பாதிக்காது: ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பதில்!

Update: 2022-04-01 11:44 GMT

இந்தியா மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றதால் இந்தியா மற்றும் ரஷ்யாவின் உறவுகள் பாதிக்கப்படாது என்று ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறியுள்ளார்.

இது குறித்து டெல்லி வந்துள்ள ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: பல தசாப்தங்களாக இந்தியாவுடன் உறவு வளர்ந்து வருகின்றது. எனவே இதன் அடிப்படையில்தான் அனைத்து துறைகளிலும் எங்களின் ஒத்துழைப்பை அழித்து வருகிறோம்.

மேலும், உக்ரைன் நெருக்கடியை இந்தியா கவனித்து வருகிறது. போருக்கு பின்னர் மிகவும் அமைதியான நாடாக உக்ரைன் இருக்கும் என நம்புகிறேன். இந்தியாவை பொறுத்தமட்டில் வெளியுறவு கொள்கைகள் சுதந்திரம் மற்றும் உண்மையான தேசத்தின் நலன்களில் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News