உள்நாட்டிலேயே தயாரான டோர்னியர் விமானத்தின் முதல் பயணம்: மத்திய அமைச்சர் பங்கேற்பு!
இந்தியாவில் தயாரான டோர்னியர் விமானத்தின் முதல் பயணியர் சேவை இன்று (ஏப்ரல் 12) முதல் தொடங்கியது.
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், டோர்னியர் 228 வகையிலான விமானங்களை தயார் செய்து வருகிறது. இந்த விமானத்தில் 17 பேர் வரையில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதனை ராணுவ சேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், அலையன்ஸ் ஏர் நிறுவனம் இரண்டு டோர்னியர் விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது. அதன்படி முதல் விமானம் இந்நிறுவனத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அதன்படி இந்த விமானத்தின் பயணிகள் சேவை முதன் முறையாக துவங்கப்பட்டது. அசாமில் இருந்து அருணாச்சல பிரதேசத்திற்கு இந்த விமானம் இயக்கப்பட்டது. இதில் மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் கிரண் ரிஜிஜூ உள்ளிட்டோர் பயணம் செய்தனர் குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar