சென்னை காவல் நிலையத்தில் வாலிபர் மரணம் - தேசிய மனித உரிமை ஆணையம் சென்ற புகார்
சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபர் காவல் நிலையத்தில் இறந்தது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் சென்னையைச் சேர்ந்த சங்கர் என்பவர் டெல்லியை சேர்ந்த அமல் காந்தி ஆகிய இரண்டு பேரும் இணையதளத்தின் வாயிலாக புகார் அளித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 18ம் தேதி நள்ளிரவில் ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது விக்னேஷ் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் டூ வீலரில் வந்தனர். அவர்களை மடக்கி பிடித்த போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விடிய, விடிய தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் விக்னேஷ் தனக்கு வாந்தி, மயக்கம் வருவதாக கடந்த 19ம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்த போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விக்னேஷின் உறவினர்கள் போலீசார்தான் அடித்து கொன்றதாக கூறினர். மேலும், உறவினர்களின் அனுமதியின்றி போலீசாரே உடலை தகனம் செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Daily Thanthi
Image Courtesy: National Herald