கேரளாவில் தக்காளி காய்ச்சல் - தமிழகத்தில் பாதிப்பு ஏற்படுத்துமா? சுகாதாரத்துறை என்ன சொல்கிறது!

Update: 2022-05-08 13:28 GMT

கேரளாவில் தற்போது புதிய வகையிலான தக்காளி காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

கேரளா மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் புதிய வகையிலான காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த காய்ச்சலால், உடல்வலி, சோர்வு, கை கால்கள் வெள்ளை நிறமாக மாறுதல், முகத்தில் சிவப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றுதல், வலியுடன் ஏராளமான குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் ரத்த மாதிரியை பரிசோதனை மேற்கொண்டதில், தக்காளி காய்ச்சல் என்று புதிய வகை வைரஸ் தொற்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது. இருந்தபோதிலும் இது போன்ற காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராகிருஷ்ணன் அளித்துள்ள பேட்டியில், தக்காளிக்கும், தக்காளி வைரசுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இது ஒருவகையான காய்ச்சல்தான். எனவே பெரிய அளவில் பாதிப்பு இல்லை. இவ்வகையிலான வைரஸ் குழந்தைகளின் முகத்தில் தக்காளி போன்ற புள்ளிகள் ஏற்படும். இதனால் இதற்கு தக்காளி வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Source: Dinamalar

Image Courtesy: India Today

Tags:    

Similar News