"ராகுல் இன்னும் விக்கெட்டும் எடுக்கவில்லை, ரன்னும் அடிக்கவில்லை" - பா.ஜ.க தேசிய துணை தலைவர் ராமன் சிங் விமர்சனம்!

Update: 2022-05-21 13:45 GMT

"நீண்ட காலமாக நாட்டு மக்களை அவர்கள் (காங்கிரஸ்) கொள்ளையடித்தனர். இனி அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது." என்று செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் கூறியுள்ளார்.


2013ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தோல்வியிலிருந்து காங்கிரஸ் இன்றும்  மீண்டு எழவில்லை. இரு நாடாளுமன்றத் தேர்தல்களில் பெரும் தோல்விகளை சந்தித்து,   இடைக் காலங்களில் சில மாநிலங்களை காங்கிரஸ் கைப்பற்றினாலும், தற்போது காங்கிரஸ் வசம்  வெறும் இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன. இப்படி தேசிய மற்றும் பிராந்திய அரசியலில் காங்கிரஸ் அஸ்தமனமாகி வருகிறது. 


காங்கிரஸின் இந்த பரிதாப நிலைக்கு காரணம் கட்சியின் தேசிய தலைமையே, நரேந்திர மோடி மற்றும் பாஜக போன்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சக்தியை வீழ்த்த, காங்கிரஸ் அதிரடி வியூகங்களை வகுக்காமல் மெத்தனம் காட்டி வருவதே காரணமாகும்.


இந்நிலையில், 2013க்கு பிறகு காங்கிரஸ் சிந்தனை அமர்வு கூட்டம் ராஜஸ்தானில் நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெற்ற கூட்டம் என்பதால். கூட்டத்தில் பல முக்கிய கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன. 


கவலை முகாம்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய துணைத் தலைவர் ராமன் சிங் : 2013இல் 13 மாநிலங்களில் அவர்கள் ஆட்சியில் இருந்தனர். ஆனால் தற்போது இரண்டு மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளனர். இந்த சிந்தனை அமர்வு கூட்டத்திற்கு பின்பு எந்த  மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சியில் இருக்காது. இது சிந்தனை அமர்வு கூட்டம் அல்ல, இது ஒரு கவலை முகாம். அவர்கள் ஒருவரை கேப்டனாக நினைக்கிறார்கள் அவருக்கு கேப்டனாக விருப்பமில்லை. அவர் ரன்னும் அடிக்கவில்லை விக்கெட்டும் எடுக்கவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சி என்பது மூன்று பேருக்கு மட்டுமே என்பது. காங்கிரஸில் மூன்று பேருக்கு மேல் அவர்களால் சிந்திக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

JVikatan

Similar News