வடமாநில மாணவர்களால் கொரோனா பரவுகிறதா? மா.சுப்பிரமணியத்திற்கு உ.பி. அமைச்சர் கடும் கண்டனம்!

Update: 2022-06-01 23:51 GMT

வடமாநில மாணவர்களால்தான் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவியதாக தி.மு.க. அமைச்சர் மா.சுப்பிரமணியம் கருத்திற்கு உத்தரப்பிரதேச மாநில அமைச்சர் ஜிதின் பிரசாதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 163 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பற்றி சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்களில் கொரோனா உயர்வதற்கு காரணம் வடஇந்தியாவில் தொற்று கட்டுக்குள் இல்லாததே காரணம் ஆகும். எனவே அங்கிருந்து வரும் வடமாநில மாணவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா உயர்கிறது. எனவே கல்வி நிறுவனங்களில் விடுதிகளிலும், உணவு அருந்தும் இடங்களில் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இவரது கருத்துக்கு உத்தரபிரதேச அமைச்சர் ஜிதின் பிரசாதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நோய் கிருமிக்கு எந்த மாநில எல்லைகளும் தெரியாது. எனவே வடஇந்தியர்களை இழிவுபடுத்தும் விதமாக தமிழக அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் இழிவான செயல் ஆகும். இவரது கருத்துக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News