யோகாவை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக கடைப்பிடியுங்கள் - பிரதமர் மோடி வலியுறுத்தல்!

Update: 2022-06-13 10:45 GMT

வருகின்ற நாட்களில் சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாடவுள்ளது. எனவே யோகா தினத்தை கடைப்பிடித்து யோகாவை உங்களின் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றுங்கள் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி 'பன்னாட்டு யோகா நாள்' கொண்டாடப்படும் என்று ஐக்கிய நாடுகள் அவை அறிவித்தது. சுமார் ஐந்தாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தி உரையாற்றியிருந்தார். அதன்படி ஜூன் 21ம் நாளை பரிந்துரைத்திருந்தார். அதனை ஏற்ற ஐநா பொதுச்சபை உடனடியாக அமல்படுத்தியது.

இந்நிலையில், வருகின்ற ஜூன் 21 சர்வதேச யோகா தினம் வருவதை முன்னிட்டு பிரதமர் மோடி தமிழில் ட்விட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், வரும் நாட்களில், சர்வதேச யோகா தினத்தை உலகம் கொண்டாடவுள்ளது. யோகா தினத்தை கடைபிடித்து, யோகாவை உங்கள் அன்றாட வாழ்வின் ஒர் அங்கமாக மாற்றுமாறு அனைவரையும் வலியுறுத்துகின்றேன். நன்மைகள் பல.. என்று குறிப்பிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twitter

Tags:    

Similar News