இந்தியாவுக்கு எதிரான போராட்டம்: உடனடியாக கைது செய்து வெளியேற்றும் குவைத் அரசு!
நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அவதூறாக பேசியதாக போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்து நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு குவைத் அரசு முடிவு செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா பங்கேற்ற தொலைக்காட்சி விவாதங்களில் இந்து கடவுள் பற்றி இழிவாக பேசியதால் நபிகள் நாயகம் பற்றி சில கருத்துக்களை பேசினார். இதற்கு இஸ்லாம் மதங்களில் கண்டனம் எழுந்தது. அதே போன் அரபு நாடுகளிலும் சிலர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில், நுபுர் சர்மாவுக்கு எதிராக குவைத்தில் கண்டன போராட்டம் நடத்தினர். இதில் வெளிநாடுகளைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணப்பட்டு அவர்களை குவைத்து போலீஸ் கைது செய்து சொந்த நாட்டுக்கு வெளியேற்றம் செய்வதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது. இதனால் அங்குள்ள இஸ்லாமியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக 'அராப் நியூஸ்' என்கின்ற ஆங்கில நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: குவைத் நாட்டு சட்டத்திட்டத்தின்படி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் அல்லது தர்ணாவில் பங்கேற்க கூடாது. இந்த சட்டத்தை மீறி யாராவது போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்றால் அவர்களை அடையாளம் காணப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்படும். அதே போன்று நுபுர் சர்மாவுக்கு எதிராக போராடியவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் கைது செய்யப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம் என்று கூறியுள்ளது.
Source, Image Courtesy: Dinamalar